கடல்...
உலகின் முதல் அதிசயம்.சத்தமிடும் ரகசியம்.காலவெள்ளம்தேங்கிநிற்கும் நீலப் பள்ளம்.வாசிக்கக் கிடைக்காதவரலாறுகளைத் தின்றுசெரித்துநின்றுசிரிக்கும் நிஜம்.கடல்...ஒருவகையில் நம்பிக்கை.ஒருவகையில் எச்சரிக்கை.கடல்குடித்துக் கொண்டிருந்தகலைவண்ணன் மடியில்கிடந்ததமிழ்ரோஜாவை மறந்துபோனான்.அவள் அழகின் நவீனம்.சிறகுகளைந்து சுடிதார்கொண்டசொப்பனதேவதை. ரத்தஓட்டம்பாயும் தங்கம் அவள் தேகம்.பொறுக்கி எடுத்த உலகஅழகுகளை நெருக்கித் தொடுத்தநேர்த்தியான சித்திரம். குமரிவயதுகொண்ட குமரி அவள்.அவன் அழகன். இளைய அறிஞன்.காதலிக்கும்போதும் கம்பீரம்குறையாதவன்.என்ன யோசனை?என்றாள் தமிழ்.கலைவண்ணன் மனதுகரையேறியது.இந்தச் செவிட்டுக் கரைகளோடுஅந்த அலைகள் இத்தனையுகங்களாய் அப்படி என்னதான்பேசும் என்று யோசிக்கிறேன்.பூமியில் கிடந்துகொண்டே இந்தக்கடல் தூரத்துவானத்துக்குத்தூரிகையில்லாமல் எப்படிவர்ணமடிக்கிறது என்றுயோசிக்கிறேன்.மடியில் கிடந்தவள் நொடியில்எழுந்தாள்.நீங்கள் கடல்பைத்தியம்.இல்லை. நான் கடற்காதலன்.கடல் உங்களுக்குச் சலிக்கவேசலிக்காதா?காதலியும் கடலும் சலிப்பதில்லை தமிழ்ரோஜா.அவள் மல்லிகைக்கரம் தொட்டுமணிக்கட்டில் முத்தமிட்டான்.நேசமின்சாரம் நெஞ்சுக்குள் பரவியது.அவளை இழுத்து வளைத்துஇறுக்கி இறுக்கி உருக்கி உருக்கிமடியில் ஊற்றிக் கொண்டான்.ஓர் அலை அவர்கள் மீது அட்சதை தூவியது.காதுமடல்களின் வெயில்மறைவுப்பிரதேசங்களில் விளையாடிஅவன் விரல் நன்னம்பிக்கை முனைநோக்கிநகர்ந்தபோது வெடுக்கென்று விலகிக்கொண்டவள் பொய்க் கோபத்தில் பூத்தாள்.அவன் அறிவான் - ஊடல் என்பதுபசிதூண்டும் பந்தி. பந்திக்கு முந்தியவளைவம்புக்கிழுத்தான்.வா. கொஞ்ச நேரம் கடலோடு கால்நனைப்போம்.அய்யோ. கடலுக்குள்ளா? நான் மாட்டேன்.கலாபமயில் கூட்டுப்புழுவானது குறுகிக் குறுகி.ஏன்? என் மீது நம்பிக்கையில்லையா?இல்லை, கடல்மீது நம்பிக்கையில்லை.எதனால்?ஆக்டோ பஸ அலைகள் என்னை அள்ளிக்கொண்டோ டிவிட்டால்?அப்படியாவது கடல்நீர் குடிநீராகட்டுமே.சிரித்தது அவன் நுரைத்தது கடல்தள்ளி நின்றாள் தமிழ்ரோஜா,தான்மட்டும் அலைதாண்டிக் கடல்புகுந்தான்கலைவண்ணன்.வாமாட்டேன். எனக்கு பயம் தண்ணீர் பயம்.குடிநீர் குளிநீர் தவிர எல்லாம் பயம்.வெள்ளித்திரையில் வெள்ளம் பார்த்தாலேவிழிமுடிக் கொள்வேன்.ஆறோ ஏரியோ கடலோ என் கனவுகளில்ததும்பும்போது என் படுக்கையில் நான்வியர்த்து விழிக்கிறேன்.மாட்டேன் கடலாட மாட்டேன். என்னைஆபத்துக்குள் அழைக்காதீர்கள்.ஒரே ஒரு பயம்எனக்கு தண்ணீர் பயம்பேசப் பேச அவள்படபடப்பைப் பறைசாற்றினகண்களில் உடைந்துவிழுந்தமின்மினி மின்னல்கள்.கலைவண்ணன் கரைமீண்டான்.அவளை ஆதரவாய் அணைத்துஅங்கவஸதிரமாய்த் தோளில்அணிந்து அவள் சுட்டுவிழி தாழும்வேளை கன்னத்தில் சுட்டுவிரல்கையெழுத்திட்டான்.காதல் மண்டியிட்டான். காதில்ஓதினான்.தமிழ்ரோஜாஅதைவிட சுகமாகஅம்சத்வனிராகம்கூட அவள்பெயரை உச்சரித்திருக்கமுடியாது.காதல் அழைக்கும் போதுதான்பெயர்வைத்ததன்பெருமைபுரிகிறது.அந்த சுகம் மீண்டும் அவளுக்குவேண்டியிருந்தது. அதனால்உம் கொட்டாமலிருந்தாள்.தமிழ்ரோஜா- இப்போது அவன் அழைத்ததுதோடிராகம்.உம் என்றாள் தமிழ்.தண்ணீருக்கு நீ பயந்தால்உன்னைக்கண்டு நீயேபயப்படுகிறாய் என்றுஅர்த்தம்.புரியவில்லை.உன் உடம்பு என்பதேமுன்றில் இரண்டுபங்கு தண்ணீர்.உன் அழகுதேகம் என்பது 65சதம் தண்ணீர்.மெய்யாகவா?தமிழிடம்பொய்சொல்வேனா?விஞ்ஞானம் விளம்பக்கேள்...வாழும் உயிர்களைவடிவமைத்தது தண்ணீர்.70 சதம் தண்ணீர் - யானை.65 சதம் தண்ணீர் - மனிதன்.என் அமுதமே. உன் உடம்பில்ஓடுவது 7.2 லிட்டர் உப்புத்தண்ணீர்.நம்ப முடியவில்லை.உண்மைக்கு உலகம்வைத்தபுனைபெயர் அதுதான்.உடம்பில் ஏன் உப்புநீர்ஓடுகிறது?கடற்கொடை. தாய்தந்தசீதனம். முதல் உயிர் பிறந்ததுநீரில் என்பதால் ஒவ்வோர்உடம்பிலும் இன்னும்ஓடிக்கொண்டேயிருக்கிறது அந்தஉறவுத் திரவம்.முதல் உயிர் பிறந்ததுகடலிலா? நம்புவதெப்படிநான்?கலையின் கழுத்தைக்கட்டிக்கொண்டாள் தமிழ்.ஒருவருக்கான காற்றைஇருவரும் சுவாசித்தார்கள்.சுகபோதையிலும் கலைவண்ணன்உண்மை உளறினான்.கடலில் பிறந்த முதல் உயிர்தண்ணீரில்தானே சுவாசித்திருக்கமுடியும். அந்த மரபுரிமையின்தொடர்ச்சிதான் இன்றும்கர்ப்பத்தில் வளரும் சிசுதண்ணீர்க் குடத்தில்சுவாசிக்கிறது.ஆகா, என்று ஆச்சரியம்காட்டிய தமிழ் அவன் முகத்தில்முள்குத்தாத பிரதேசம்தேடிமுத்தமிட்டாள்.அந்த முத்தச்சூடு உயிரெல்லாம்பரவக்கண்டவன், அவள்கழுத்தடியில் கைபதித்துக்குளிரக்குளிரக் குறுமுடிகோதினான். குழந்தையே.என் குழந்தையேஎன்றுகொஞ்சினான்.புரிகிறதா? கடல் நம்தாய். தாய்கண்டு தமிழ்அஞ்சலாமா?தாயென்றால் பூமியை அவள்ஏன் புசிக்க வேண்டும்?அவள் மீது குற்றமில்லை.கடலின் கீழேநகரும் பாறைகள்அவளை நகர்த்திவிடுகின்றன.அவளுக்கா கருணையில்லை.கடல் தந்த அனுமதியால்தான்முழ்காத நிலப்பகுதி முச்சுவிடமுடிகிறது.கடல்நீர் இடம்மாறிநிலப்பரப்பில் நின்றால் எல்லாஇடங்களிலும் முன்றுகிலோமீட்டர் உயரம். தண்ணீர்நிற்கும்.புள்ளிவிரம் சொல்லியேபொழுதுபோக்கிவிட்டீர்கள்.சரி, நல்லவிவரம்சொல்லட்டுமா? ஒருமுத்தத்தில் எத்தனை வோல்ட்மின்சாரம்தெரியுமா?போதும். போதும்.புள்ளிவிவரப் புலியே.ஆளைவிடுங்கள்.விடமாட்டேன். வா.தண்ணீரில் நனை அல்லதுதண்ணீரை நனை. அலையோடுவிளையாடு.தெறிக்கும் திரவநட்சத்திரங்கள்சொல்லாத இடங்களில்விழுகையில் இல்லாத அனுபவம்எழுமே....அந்த சுகம் துய்.எத்தனை மனிதர்கடல்பார்த்தனர்? எத்தனைமனிதர் இதில் கால்வைத்தனர்?வா. இந்தச் சிற்றலையில்கால் வைத்து யாரும் செத்துப்போனதில்லை.தண்ணீர் பயம் தவிர்.சொட்டச் சொட்ட நனை.கிட்டத்தட்டக் குளி.நீரின் பெருமை நிறையப்பேர்அறியவில்லை. காதலி பெருமைபிரிவில். மனைவி பெருமைமறைவில். தண்ணீரின் பெருமைபஞ்சத்தில். அல்லதுவெள்ளத்தில்.நீ உணவில்லாமல் ஒருமாதம்வாழலாம். நீரில்லாமல்ஒருவாரம் வாழமுடியாது.தண்ணீர்தான் உயிர். இந்தக்கடல் அந்த உயிரின் தாய்.தாயோடு தள்ளி நிற்பதா?வா.எட்டி நின்றவளைக் கட்டிப்பிடித்தான். திமிறினாள்.வாழைத்தண்டாய்ஓடிந்தாள். வாளை மீனாய்வழுக்கினாள்.அவன் முன்னுக்கிழுத்தான். அவள்பின்னுக்கிழுத்தாள்.வேண்டாம். இந்தவிளையாட்டுமட்டும்வேண்டாம்.என்னோடு வாழ்ந்தால் நீநெருப்புப் பள்ளங்கள் தாண்டவேண்டியிருக்கும். நீர்கண்டுபயந்தால் எப்படி?நெருப்புப் பயம் இல்லை.தண்ணீர்தான் பயம்.அவன் தூக்கமுயன்றான். அவள்துவண்டு விழுந்தாள்.கைதட்டிச் சிரித்தன அலைகள்.நாடகம் பார்த்தன நண்டுகள்.சிதறிவிழுந்தவளைச்சேர்த்தெடுத்தான். அவளைச்சுமந்து அலையில் நடந்தான்.அவளோ அந்தரத்தில்நீச்சலடித்தாள். இடுப்பளவுத்தண்ணீரில் இறக்கிவிட்டான்.அஞ்சினாள். தண்ணீரின்ததும்பலில் மிரண்டாள்.அவனை உடும்பாய்ப்பற்றினாள். அவன் உதறிஒதுங்கினான்.நுரைச் சதங்கைகட்டி ஆடிவந்தஅலைகள்கண்டு அலறினாள்.பிரமைபிடித்துப்பேச்சிழந்தாள்.தூரத்திலிருந்து ஒரு பேரலைஅவள் பெயர் சொல்லிக்கொண்டே படைதிரட்டிவருவதாய்ப் பட்டது அவளுக்கு.அவ்வளவுதான்.அவள் ஞாபகச்சங்கிலிஅறுந்துவிட்டது.அந்த முர்க்க அலையின்மோதுதலில் தன்னிலை குலைந்துதடுமாறி எழுந்து ஒருகணம்மிதந்து மறுகணம் அமிழ்ந்துமீண்டும் எழுந்து மீண்டும்விழுந்தாள். அலைகளில்தொலைந்தாள்.
- வைரமுத்து